ரவி மோகன்
தற்போது பிரபல நடிகராக இருக்கும் ரவி மோகன், பல வித்தியாசமான கதை அம்சங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார்.
சூரியின் மாமன் திரைப்படம் வெற்றி பெற்றதா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!!
சமீபகாலமாக தனது மனைவி ஆர்த்தி உடன் ஏற்பட்ட பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பெரும் பேசும் பொருளாய் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரவி மோகன் தற்போது சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துளளார். அது என்னவென்றால், வடுக்கப்பட்டி ராமசாமி படத்தை இயக்கிய கார்த்திக் யோகி உடன் ரவி மோகன் கூட்டணி வைத்துள்ளார்.
பல படங்களில் ஹீரோவாக கலக்கி வந்த இவர், இந்த படத்தில் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்து இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.