சூரி
காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி, விடுதலை படத்திற்கு பிறகு பிரபல ஹீரோவாகவே மாறிவிட்டார் என்றே சொல்லாம்.
சமீபத்தில் இவரது நடிப்பில் மாமன் திரைப்படம், கடந்த மே 16ம் தேதி வெளியானது. இப்படத்தை இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். Lark Studios நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தை Hesham Abdul Wahab இசையமைத்திருந்தார. மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
மாமனும் மருமகனும் இடையிலான உறவை மையமாக உருவான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Thug Life படத்திற்காக சிம்பு வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம் இதோ..
வசூல்
முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் மாமன் படத்தின் மொத்த வசூல் விவரம் பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, இப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 42 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.