Thug Life
மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் – சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள தக் லைப் திரைப்படம் வருகிற ஜூன் 5 வெளியாக இருக்கிறது. இப்படத்தில் திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக சிம்பு மற்றும் கமல் ஹாசன் மோதி கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் பேசும் பொருளாய் மாறியிருக்கிறது.தற்போது தக் லைப் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ளதால் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேரன் – டொவினோ நடித்துள்ள நரிவேட்டை படம் எப்படி இருக்கிறது? – தமிழ் திரைவிமர்சனம்!!
சம்பளம்
இந்நிலையில் தக் லைப் படத்திற்காக சிம்பு வாங்கிய சம்பளம் விவரம் தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படத்திற்காக சிம்பு ரூபாய் 40 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.