Secrets We Keep
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் புதிய வெப் சீரீஸ் Secrets We Keep தமிழ் டப்பிங்கில் வெளியாகி இருக்கிறது. மர்மம் மற்றும் திரில்லர் நிறைந்த இந்த சீரீஸ், பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. தற்போது இதன் கதைக்களம் குறித்து இங்கு பார்க்கலாம்.
கதைக்களம்:
சிறுமி ரூபி என்ற கதாபாத்திரம், ஒரு பணக்கார குடும்பத்தில் பணியாளராக வேலை பார்க்கிறார். ஆனால், ஒரு நாள் அவர் திடீரென மாயமாகிறார். இந்த சம்பவம் அந்த குடும்பத்தை பெரிதாக பாதிக்கவில்லை அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை சாதாரணமாக தொடர்கிறார்கள்.
ஆனால், அவர்களுக்கு அருகில் வசிக்கும் நமது கதாநாயகி, ரூபிவின் மறைவை பற்றி ஆராய முடிவு செய்கிறார். கதாநாயகி ஒரு பத்திரிகையாளர்; அவர் போலீஸுக்கு உதவியாக, ரூபியை கண்டுபிடிக்க முக்கியமான தகவல்களை சேகரிக்கிறார். இந்த தேடலின் போது, அந்த குடும்பத்தின் இருண்ட ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியாகின்றன. ரூபிக்கு என்ன ஆனது? இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? இதுதான் சீரீஸின் மையக் கரு.
கதை பற்றிய அலசல்:
மறைவு நிழல்கள் சீரீஸில் நடிகர்கள் அனைவரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக, கதாநாயகி, தன் பாத்திரத்திற்கு முழுமையாக பொருந்தி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாக, சீரீஸின் பின்னணி இசையும் (Background Music) ஒளிப்பதிவும் (Cinematography) மிகப்பெரிய பலமாக உள்ளன. பின்னணி இசை, ஒரு திரில்லர் சீரீஸுக்கு பொதுவாக இருக்கும் சத்தமில்லாமல், ஒரு புதிய அணுகுமுறையுடன் அமைதியாகவும், ஆழமாகவும் அமைந்துள்ளது. ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருக்கிறது ஒவ்வொரு காட்சியும் ஒரு கிரைம் திரில்லருக்கு தேவையான மனநிலையை சரியாக பிரதிபலிக்கிறது.
இந்த சீரீஸ் ஒரு கிரைம் திரில்லருக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு எபிசோடிலும், யார் குற்றவாளி என்ற சந்தேகம் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் நம்மை திரும்பத் திரும்ப பார்க்க வைக்கிறது. ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூகத்தில் நாம் பணியாளர்களை எப்படி நடத்துகிறோம், டீனேஜ் பிள்ளைகளை எவ்வாறு கண்காணிக்க வேண்டும் போன்ற சமூக அக்கறையை கதையோடு பின்னிப்பிணைத்து சொல்லப்பட்டு இருக்கிறது.
நெகடிவ்:
திரைக்கதை சில இடங்களில் சற்று மெதுவாக செல்கிறது.
சில விஷயங்களை இன்னும் விரிவாக விளக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
சிறிய குறைகள், ஆனால் பார்க்கத் தகுந்தது
RATINGS 7/10