Fight or Flight
கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் ஆக்ஷன் படமான Fight or Flight, தற்போது தமிழ் டப்பிங்கில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இப்படம் குறித்து பார்க்கலாம் வாங்க..
திரைக்கதை
Fight or Flight படம் ஒரு சர்வதேச உளவாளியை மையமாகக் வைத்து அமைந்துள்ளது. ஹீரோ ஒரு முக்கியமான ரகசிய ஆவணத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று, ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பயணிக்கிறார். ஆனால், அந்த விமானத்தில் பயணிகளாக மாறுவேடமிட்டு, தீவிரவாதிகள் ஏற்கனவே உள்ளே இருக்கிறார்கள்.
இந்த ஆவணத்தை பாதுகாக்க, நம்ம ஹீரோ அவர்களை எதிர்த்து சண்டையிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கடைசியில் இதில் வெற்றி பெற்றா.. இல்லையா என்பதே படத்தின் கதை.
திரைக்கதை பற்றிய அலசல்:
இந்த சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷன் நிறைந்த கதை, புல்லெட் ட்ரெயின் படத்தை நினைவூட்டினாலும், இது விமானத்தில் நடக்கும் ஒரு தனித்துவமான அனுபவம்.
Fight or Flight படத்தின் மிகப்பெரிய பலம் அதன் ஆக்ஷன் காட்சிகள். முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை, ஒரு நிமிடம் கூட சுவாரசியம் குறையவில்லை. விமானத்திற்குள் நடக்கும் சண்டைக் காட்சிகள், ஆயுதங்களைப் பயன்படுத்திய ஆக்ஷன், மற்றும் சுற்றுப்புறத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்திய காட்சிகள் அனைத்தும் அட்டகாசமாக உள்ளன.
Thunderbolts* – தமிழ் திரைவிமர்சனம்
படத்தில் சிறிது நகைச்சுவை இருந்தாலும், மொத்தத்தில் இது ஒரு தீவிரமான ஆக்ஷன் படம். சில காட்சிகளில் இரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் உள்ளன. எனவே, இதுபோன்ற காட்சிகள் பிடிக்காதவர்கள் இதை தவிர்க்கலாம். ஆனால், படத்தில் வல்கர் காட்சிகள் அல்லது நிர்வாணம் எதுவும் இல்லை படத்தில் ஆக்ஷன் மட்டுமே மையமாக உள்ளது.
Fight or Flight படத்தின் தமிழ் டப்பிங் மிகவும் தரமாக செய்யப்பட்டுள்ளது. வசனங்கள் காட்சிகளுக்கு பொருத்தமாக அமைந்துள்ளன, மேலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்றவாறு குரல் மாடுலேஷன் சிறப்பாக உள்ளது.
நெகடிவ்:
Fight or Flight படம் ஆக்ஷனில் சிறப்பாக இருந்தாலும், சில லாஜிக் ஓட்டைகள் உள்ளன. உதாரணமாக, இவ்வளவு தீவிரவாதிகள் எப்படி விமானத்தில் ஏறினார்கள்? விமான நிலைய பாதுகாப்பை எப்படி தாண்டினார்கள்? சில காட்சிகளில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன என்ற கேள்விகளும் எழுகின்றன.
மொத்தத்தில் படம் எப்படி இருக்கு?
ஆக்ஷன் திரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு Fight or Flight ஒரு அற்புதமான தேர்வு.
Ratings: 7.5/10