“பைனல் டெஸ்டினேஷன்: பிளட்லைன்ஸ்:
பைனல் டெஸ்டினேஷன் பிரான்சைஸில் 2000 முதல் 2011 வரை இந்த 5 பாகங்கள் வெளியாகி இருக்கிறது. 14 வருட இடைவெளிக்குப் பிறகு, ஆறாவது பாகமாக இந்தப் படத்தை இயக்குநர்கள் ஜாக் மற்றும் ஆடம் இயக்கத்தில் பைனல் டெஸ்டினேஷன்: பிளட்லைன்ஸ் உருவாகி இருக்கிறது.
திரைக்கதை:
பைனல் டெஸ்டினேஷன்: பிளட்லைன்ஸ் படத்தில், கதாநாயகிக்கு 56 வருடங்களுக்கு முன்பு நடக்க இருந்த ஒரு விபத்து (Accident) பற்றிய கனவு, திரும்பத் திரும்ப வருகிறது. இந்த விபத்தை அவருடைய பாட்டி தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஆனால், இந்த கனவு ஏன் தனக்கு மட்டும் வருகிறது? இந்த விபத்துக்கும் தனக்கும் என்ன தொடர்பு? தன்னுடைய பாட்டிக்கும், குடும்பத்துக்கும் இதற்கு என்ன சம்பந்தம் இருக்கிறது? இதற்கான பதிலைத் தேடி, கதாநாயகி களத்தில் இறங்குகிறார். இதற்குப் பிறகு கதையில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் எப்படி இருக்கிறது?.. ரசிகர்களின் கருத்து!!
திரைக்கதை பற்றிய அலசல்:
Skyview Restaurant Sequence, Garbage Truck Scene, Scanner Machine Incident போன்ற காட்சிகள் இதில் உச்சகட்ட திகிலைத் தருகின்றன. இவை அனைத்தும் சூப்பராக வொர்க் அவுட் ஆகியிருக்கின்றன.கதாநாயகி கேட்லின் சாண்டா வான் ஒரு ஹாலிவுட் கதாநாயகிக்கு இருக்க வேண்டிய அனைத்து ஸ்கோப்பும் இந்தப் படத்தில் இருக்கிறது. இவருடைய கதாபாத்திரத்தை நேர்த்தியாகவே பூர்த்தி செய்திருக்கிறார்.
சினிமாட்டோகிராஃபி, மியூசிக், எடிட்டிங், DI டீம், சவுண்ட் டிசைனிங் எல்லாமே கதைக்கு தேவையான அளவு சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, SFX (Special Effects) இந்தப் படத்தில் செம்மையாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. இது படத்திற்கு ஒரு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஆனால், VFX இன்னும் கொஞ்சம் மேம்படுத்தியிருக்கலாம்.
பாசிட்டிவ்:
இரத்தம் தெறிக்கும் கொடூரமான காட்சிகள், பிரான்சைஸின் ஸ்டைலை பரபரப்பாக மெயின்டெய்ன் செய்கிறது.
தியேட்டரில் பார்க்கும்போது, இந்தப் படம் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகிறது.
விஷாலை திருமணம் செய்யபோகும் நடிகை தன்ஷிகா!! வெளியான திருமண தேதி..
நெகடிவ் :
செகண்ட் ஹாஃப் கிளைமாக்ஸுக்கு முன் 15-20 நிமிடங்கள் கொஞ்சம் தொய்வாக இருக்கிறது. இது படத்தின் பரபரப்பை குறைக்கிறது.
படத்தின் ரன்னிங் டைம் ரசிகர்களுக்கு கொஞ்சம் சலிப்பை தட்டுகிறது.
மொத்தத்தில் படம் எப்படி இருக்கு?
A சர்டிஃபைட் படம் என்பதால், இரத்தம் மற்றும் கொடூரமான காட்சிகளை ரசிக்கும் பிரான்சைஸ் ஃபேன்ஸுக்கு இது ஒரு ட்ரீட்.
Ratings: 6.5/10