விஷால்
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக விளங்கும் விஷால், பல வித்தியாசமான கதை அம்சங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். தற்போது 47 வயதாகும் விஷாலின் திருமணம் எப்போது என்பதைப் பற்றிய கேள்வி நீண்ட நாட்களாகவே ரசிகர்கள் மத்தியில் கேட்கப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம், விஷால் – அனிஷா ரெட்டி இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் போனது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
விஷால், நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிட வேலைகளை முழுமைப்படுத்திய பிறகு தான் திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று அப்போதே கூறியிருந்தார். தற்போது அந்த கட்டிடம் முடிவடைந்து, விரைவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அவரது திருமணத் திட்டம் மீண்டும் பேசப்படும் நிலையில் உள்ளது.
₹1000 கோடி ரூபாய் முறைகேடு! தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ஐடி ரெய்டு..
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விஷால், “இந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி எனது பிறந்த நாள். அதே நாளில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. காதல் திருமணமாக இருக்கும். ஒரு மாதமாக அந்தப் பெண்ணை காதலிக்கிறேன். நேரம் வந்ததும் பெயரை தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.
திருமண தேதி
இந்நிலையில் நடிகை சாய் தன்ஷிகாவுடன் விஷால் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிய உறவில் இருப்பதாகவும், நடிகர் சங்க கட்டிடம் திறக்கும் விழாவுக்குப் பிறகு, ஆகஸ்ட் 27-ல் விஷால் – தன்ஷிகா திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.