ரெட்ரோ
பிரபல நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கும் சூர்யா, நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது.
நொடிக்கு நொடி திகில்.. மிரளவைக்கும் டாப் 10 ஹாரர் படங்கள்.. லிஸ்ட் இதோ!!
கார்த்திக் சுப்புராஜின் Stone Bench Films நிறுவனமும் சூர்யாவின் 2D Entertainment நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தது.
இப்படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ், நாசர் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரெட்ரோ திரைப்படம் முதல் பாதி நன்றாக இருந்தது என்ற விமர்சனம் வந்தாலும், இரண்டாம் பாதி செம்ம slow ஆக இருந்தது என சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டது. மேலும் ரெட்ரோ flop என்ற ஹாஸ்டேக் எக்ஸ் தலத்தில் பதிவிட்டு வந்தனர்.
வசூல்
இந்நிலையில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகி 12 நாட்களில் இதுவரை உலக அளவில் ரூ 96 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.