28 Degree Celsius
சமீபத்தில் நடிகர் நவீன் நடிப்பில் இயக்குனர் அணில் விஸ்வநாத் இயக்கத்தில் உருவான 28° செல்சியஸ் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ஷாலினி ஹீரோயினாக நடித்துள்ளார். காதல் / த்ரில்லர் கதை அம்சத்தில் இருக்கும் இப்படம் Amazon Prime மில் வெளியாகி இருக்கிறது. தற்போது இப்படம் குறித்து பார்க்கலாம் வாங்க..
கதைச் சுருக்கம்:
28° செல்சியஸ் என்பது ஒரு காதல் கலந்த த்ரில்லர் திரைப்படம். ஹீரோ மற்றும் ஹீரோயின் யதார்த்தமான முறையில் சந்தித்து, காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், ஹீரோயினுக்கு ஒரு மருத்துவ பிரச்சனை ஏற்படுகிறது. அவருடைய உடல் வெப்பநிலை எப்போதும் 28 டிகிரி செல்சியஸில் இருக்கவேண்டும் என்பது டாக்டரின் ஆலோசனை.
Secrets We Keep (Web Series) தரமான த்ரில்லர் கதை – தமிழ் திரைவிமர்சனம்!!
இதனாலே இருவரும் ஜார்ஜியா செல்கின்றனர். அங்கு ஒரு எதிர்பாராத சம்பவம் கதைக்கு திருப்புமுனையாக அமைகிறது. இந்த நிகழ்வுகளும், அதன் பின் நடக்கும் மர்மமும் தான் படத்தின் கதை.
படம் பற்றிய அலசல்:
நவீன் சந்திரா தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளார். காதல் மற்றும் த்ரில்லர் காட்சிகளில் இரண்டிலும் சிறப்பாக உரிய உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். ஹீரோயின் ஷாலினியுடன் அவருடைய கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்துள்ளது. மற்ற கதாபாத்திரங்கள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
படத்தின் முக்கியமான புள்ளியாக இருக்கும் மருத்துவக் கோணமும், காதல் தொடர்பும் பரபரப்பாக தொடங்கினாலும், திரைக்கதை படிப்படியாக குறைகிறது என்று சொல்லலாம். இடைவேளைக்கு பிறகு ஒரு த்விஸ்ட் காட்டப்படுகிறது, ஆனால் அதன் தாக்கம் குறுகிய நேரத்திற்கு மட்டுமே நீடிக்கிறது.
நெகடிவ்:
பின்புல இசை சீராக இருந்தாலும், பாடல்களின் தமிழ் டப்பிங் சரியாக அமையவில்லை. இது பட அனுபவத்தில் தடையாக்கமாக அமைந்தது.
திரைக்கதை சில இடங்களில் ரொம்ப மெதுவாக செல்கிறது.
RATINGS: 6/10