கடந்த 2025ம் ஆண்டு Netflix தளத்தில் தமிழ் டப்பில் வெளியாகி இருக்கும் சிறந்த ஆக்ஷன்/ த்ரில்லர் படங்கள் தொடர்பாக பார்க்கலாம் வாங்க..
1. சிட்டி ஆஃப் தி லாஸ்ட் (IMDb : 5.4)
genre : கிரைம் டிராமா
கதைக்களம்: இந்தக் கொரியத் திரைப்படம் கொலம்பியாவின் போகோடாவை மையமாகக் கொண்டு, கிரைம் நிறைந்த ஒரு நகரத்தில் நடக்கும் கதையை விவரிக்கிறது. இதில் ஒரு கிரிமினல் அமைப்பு எவ்வாறு தொடங்கி, சட்டவிரோத ஸ்மக்லிங் செயல்களில் ஈடுபடுகிறது என்பதைப் பார்க்கலாம். கதையின் நாயகன் இந்த அமைப்பின் தலைவராக மாறுவது, காமெடி மற்றும் கிரைம் கலந்த ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை உருவாக்குகிறது. கிரைம் டிராமா பிரியர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு.
2. ஆட் வித்தம் (IMDb : 5.9)
genre: ஆக்ஷன் திரில்லர்
கதைக்களம்: இந்த ஆக்ஷன் படத்தில், நாயகனுக்கு ஒரு மர்மமான கடந்த காலம் உள்ளது. அவர் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு கும்பல் அவரைத் தாக்குகிறது. இதற்கிடையில், அவரது மனைவி கடத்தப்பட, அவரைத் தாக்குபவர்களின் நோக்கத்தைக் கண்டறிந்து, மனைவியைக் காப்பாற்றுவதற்கு அவர் எவ்வாறு போராடுகிறார் என்பதுதான் கதை. ஆக்ஷன் மற்றும் கிரைம் திரில்லர் கலவையாக இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு.
3. டீமன் சிட்டி (IMDb : 5.4)
Genre : ஆக்ஷன் திரில்லர்
கதைக்களம்: இந்த ஜப்பானியத் திரைப்படத்தில், ஒரு முன்னாள் ஹிட்மேன் தனது குடும்பத்தை இழந்த பிறகு, பழிவாங்கும் பயணத்தில் இறங்குகிறார். கிரிமினல் அமைப்பை நடத்துபவர்களை முகமூடி அணிந்து எதிர்கொள்ளும் காட்சிகள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இதில் சிறப்பாக அமைந்துள்ளன. டார்க் மற்றும் தீவிரமான கதைக்களம் உங்களை முழுமையாக ஈர்க்கும்.
4. தி லைஃப் லிஸ்ட் (IMDb : 6.8)
Genre : டிராமா
கதைக்களம்: இந்தப் படம் ஒரு உணர்வுப்பூர்வமான டிராமா. கதையின் நாயகருக்கு அவரது தாய் ஒரு கடிதத்தை அளிக்கிறார். அந்தக் கடிதத்தில் உள்ள பட்டியலைப் பின்பற்றி, அவரது குழந்தைப் பருவக் கனவுகளை நிறைவேற்ற முயற்சிக்கிறார். இந்தப் பயணம் அவரது வாழ்க்கையை மாற்றுவது எப்படி என்பதை இந்தப் படம் அழகாக விவரிக்கிறது. மோட்டிவேஷன் மற்றும் பிளசன்ட் அனுபவம் விரும்புவோருக்கு இது ஒரு அருமையான தேர்வு.
28 Degree Celsius படத்தின் திரைவிமர்சனம்!!
5. பேக் இன் ஆக்ஷன் (IMDb : 5.9)
Genre : ஸ்பை திரில்லர்
கதைக்களம்: இந்தப் படத்தில், முன்னாள் உளவாளிகளான ஒரு தம்பதியர், தங்கள் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ முயல்கின்றனர். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் உளவு உலகில் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களின் பிள்ளைகள், தங்கள் பெற்றோர் உளவாளிகள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைகின்றனர். ஆக்ஷன் மற்றும் குடும்ப உணர்வு கலந்த இந்தப் படம், முழு குடும்பத்துடன் பார்க்க ஏற்றது.